துணைத்தலைவர் பதவிக்காக 2 பேர் கொலை இருவருக்கு 3 ஆயுள் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல்: கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மதுவில் ஆசிட் கலந்து இரு-வரை கொலை செய்த வழக்கில், நாமக்கல் நீதிமன்றம், இருவ-ருக்கும், மூன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அடுத்த இருக்கூரை சேர்ந்தவர் செந்தில்குமார்,40; விவசாயி. இவரது மனைவி சத்யா. 2019ல் இருக்கூர் கிராம பஞ்., உள்ளாட்சி தேர்தலில், 6-வது வார்டில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல், இருக்கூர் பஞ்., சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம், 50, மனைவி ராஜாமணி, 2வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இருவரும், துணைத்
தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில், ஆறுமுகம், தன் மனைவி ராஜாமணிக்கு, துணைத்த-லைவர் பதவியை விட்டுத்தரும்படி, செந்தில்குமாரிடம் கேட்-டுள்ளார். ஆனால், அவர் விட்டுத்தர மறுத்தார். இதனால், இருவ-ருக்கும் இடையே முன்விரோதம்
ஏற்பட்டது. இந்நிலையில், ஆறுமுகம் மற்றும் அதே பஞ்.,ல் துப்புரவு பணியாளராக பணி-யாற்றி வந்த சரவணன், 44, ஆகிய இருவரும் சேர்ந்து, செந்தில்கு-மாரை மதுவில் விஷம் கலந்து தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர்.
அதன்படி, 2019 டிச., 30ல், செந்தில்குமார், இவரது நண்பர் தியாக-ராஜன், 35, ஆறுமுகம், சரவணன் ஆகிய, 4 பேரும், பஞ்., அலுவ-லகம் அருகே உள்ள நுாலகம் முன் அமர்ந்து மது அருந்தினர். அப்-போது செந்தில்குமார் மற்றும்
தியாகராஜன் ஆகிய இருவரும் குடித்த மதுபாட்டிலில், ஆசிட் கலந்தனர். அதை குடித்த செந்தில்-குமார், தியாகராஜன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்-தனர்.
பரமத்தி போலீசார், ஆறுமுகம், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதி-மன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதி-பதி பிரபாசந்திரன், நேற்று
தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்-பட்ட ஆறுமுகம், சரவணன் ஆகிய இருவருக்கும், 3 ஆயுள் தண்-டனையும், தலா, 30,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், இந்த ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க
உத்தர-விட்டார்.