வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கம்
சேலம்: வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில், ஏப்., 15 வரை மாற்று வழித்த-டத்தில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி வார ரயில், திங்-கட்கிழமை காலை, 8:40 மணிக்கு கிளம்பி ஹூப்ளி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, கரூர் வழியே அடுத்த நாள் மதியம், 12:25 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்க ரயில், செவ்வாய் இரவு, 11:55 மணிக்கு புறப்பட்டு, வியாழன் அதிகாலை, 2:40 மணிக்கு வாஸ்-கோடகாமா
சென்றடையும். கோவா மற்றும் கேசில் ராக் ஸ்டேஷன்களுக்கு இடையே, பொறியியல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், வாஸ்கோடகாமா - வேளாங்-கண்ணி வார ரயில், ஜன., 20 முதல், ஏப்., 14 வரை
மாற்று வழித்
தடமான மட்கான், மங்களூரு, சோரனுார், ஈரோடு வழியே செல்லும்.
மறு மார்க்கத்தில் ஜன., 21 முதல், ஏப்., 15 வரை, ஈரோடு, சோரனுார், மங்களூரு, மட்கான் வழியே இயக்கப்படும். இந்த ரயில்கள், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்க-ளூரு, தும்கூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களுக்கு
செல்லாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.