பூத் கமிட்டி, கிளை நிர்வாகிகள் அர்ப்பணிப்போடு பணியாற்றிட வேண்டும்: இ.பி.எஸ்., பேச்சு
ஓமலுார்: ''பூத் கமிட்டி, கிளை நிர்வாகிகள், 100 சதவீதம் அர்ப்பணிப்-போடு, தேர்தல் பணியாற்ற வேண்டும்,'' என, ஆலோசனை கூட்-டத்தில், இ.பி.எஸ்., பேசினார்.
சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், நேற்று மாவட்ட செயலர் இளங்-கோவன் தலைமையில், ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, கட்சியின் பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசியதா-வது:
வாக்காளர் பட்டியலை ஜெராக்ஸ் எடுத்து வைத்து, கிளை நிர்வா-கிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்குள் ஒரு தொகுதியை முடிக்க வேண்டும். புதிதாக
ஆரம்பிக்கப்பட்ட, இளம் தலை-முறை விளையாட்டு வீரர்கள் அணியில், 18 முதல் 27 வயது வரை உள்ள திறமையாக விளையாடக்
கூடிய நபர்களை அணியில் சேர்க்க வேண்டும். அதன் மூலம் பல்-வேறு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும். தினந்-தோறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கட்சி பணியாற்ற வேண்டும்.
ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள் என பாகுபாடு இன்றி பொதுமக்களிடம் பழக வேண்டும். கடந்த தேர்தலில், மிக குறை-வான ஓட்டு வித்தியாசத்தில் நாம் தோல்வியுற்றோம். ஜெ., பிறந்-தநாள் விழாவை மிக எழுச்சியோடு
கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைப்பு செயலர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்-திரசேகரன், எம்.எல்.ஏக்.,க்கள் மணி, சித்ரா, ராஜமுத்து, நல்ல-தம்பி, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்-றிவேல், ஓமலுார் ஒன்றிய செயலர்கள்
அசோகன், கோவிந்தராஜ், ராஜேந்திரன், தாரமங்கலம் மணிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.