பப்பாளி மகசூல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
கம்பம்: வாழை, திராட்சையை விட நல்ல லாபம் கிடைப்பதாக பப்பாளி சாகுபடியாளர்கள் கூறியுள்ளனர் -
தேனி தோட்டத் கலை மாவட்டமாகும். காய்கறி, திராட்சை, வாழை, மா, கொய்யா போன்ற பழப்பயிர்கள், மலர்கள் அதிகம் சாகுபடியாகிறது. மகசூல் பாதிப்பு, உரியவிலை கிடைக்காதது பிரச்னைகளும் அவ்வப்போது தலைதூக்குகிறது.
வாழை சாகுபடி செய்த விவசாயிகள் சிலர் தற்போது பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். நடவு செய்த 7 மாதங்களில் பலன் கிடைக்கும் வாரம் ஒரு முறை காய் பறிக்கலாம்.
தற்போது கிலோ ரூ.15 விலை கிடைக்கிறது. 60 சென்ட் நிலத்தில் ஒரு டன் மகசூல் கிடைத்துள்ளது. 60 சென்ட் நிலத்தில் பப்பாளி சாகுபடிக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகி உள்ளது.
இது குறித்து விவசாயி நீதி கூறுகையில், ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் பப்பாளி சாகுபடி செய்துள்ளேன்.
நல்ல லாபம் கிடைத்துள்ளது. வாழை சாகுபடி செய்து விலை கிடைக்கவில்லை - 120 சென்ட் நிலத்தில் 2 டன் மகசூல் எடுத்துள்ளேன்.
பிற பயிர்களுக்கு பப்பாளி பரவாயில்லை. - நன்கு பராமரிப்பு செய்தால் ஒராண்டு வரை மகசூல் எடுக்கலாம். 50 முறை காய் பறிக்கலாம் என்றார்.