டாரஸ் லாரியை விற்று மோசடி பாதிக்கப்பட்ட பெண் தர்ணா
சேலம்: சேலம் சங்ககிரி அடுத்த தேவண்ணகவுண்டனுார் கிராமம் சந்-தைப்பேட்டை, பால்வாய் தெருவை சேர்ந்த குழந்தைசாமி மனைவி பாத்திமாமேரி, 47. இவர், கோரிக்கை மனுவை கழுத்தில் மாலையாக அணிந்து நேற்று, கலெக்டர்
அலுவலக வளாகத்தில் மகள்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவ-ருக்கு ஆதரவாக மூவர் உடன் அமர்ந்திருந்தனர். போலீசார் தடுத்தும், அவர்கள் தர்ணாவை கைவிட வில்லை.
அப்போது, பாத்திமாமேரி கூறியதாவது:
என் கணவர், 2018ல் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, 12 வீல் கொண்ட டாரஸ் லாரி வாங்கி ஓட்டி வந்தார். அதே பகு-தியை சேர்ந்த மணி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மூவர், மாதம் ஒரு லட்ச ரூபாய்
வாடகை தருவதாக ஒப்பந்தம் பேசி, என் கணவரிடமிருந்து, 2021ல், லாரியை எடுத்து சென்று, 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை கொடுத்து பின், அதை தராமல் நிறுத்திவிட்டனர்.
அதன்பின், லாரியும் தராமல், பணத்தையும் தராமல் போக்குகாட்-டினர். விசாரணையில், போலி ஆர்.சி.புத்தகம் தயாரித்து, வண்-டியின் தோற்றத்தை மாற்றி விற்பனை செய்து, மோசடியில் ஈடு-பட்டது தெரிந்தது. இதுபற்றி, 2024
பிப்.,16ல், சங்ககிரி போலீசில் புகார் அளித்தேன். சி.எஸ்.ஆர்., ரசீது கொடுத்து, நடத்திய விசார-ணைக்கு பின், மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு-விட்டனர். தற்போது வரை லாரி, பணம் ஒப்படைக்காமல் உள்-ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நட-வடிக்கை எடுத்து, லாரியை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.