கும்பக்கரையில் குளிக்க அனுமதி

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தூரம் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரம், கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.

நேற்று முன்தினம் கனமழையால் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கினால் சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

மதியம்12:00 மணியிலிருந்து குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் வெள்ளப்பெருக்கு சீராக தொடங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தண்ணீர் வரத்து சீரானது உறுதி செய்யப்பட்டது.

ரேஞ்சர் அன்பழகன் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கினார். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆர்வமாக குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement