குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுகோள்
கூடலுார்: அடிக்கடி சீதோஷ்ண நிலை மாறுவதால் குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குமுளி, கூடலுார், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதும், திடீரென மழை பெய்வதும், பனிமூட்டம் அதிகரிப்பதும் தொடர்கிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திடீரென ஏற்படும் காய்ச்சலால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரண்டு நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் என ஏராளமான மக்கள் தனியார், அரசு மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை தவிர்க்க அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி சுகாதாரத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement