ஏழை மாணவர்களுக்கு எ.கே.ஜி டூ பி.ஜி வரை இலவச கல்வி , நிதியுதவி: டில்லியில் பா.ஜ., தாராள வாக்குறுதி

3

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தால், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, நிதியுதவி வழங்கப்படும் என வாக்குறுதிகள் அறிவித்துள்ளது.



மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.,5ல் ஒரே கட்டமாக தேர்தலும், பிப்.,8 ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதியை அறிவித்து உள்ளன.


இந்நிலையில், 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (ஜன.,21) பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:


* ஏழை மாணவர்களுக்கு எல்.கே.ஜி., முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.



* ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு,


*போட்டி தேர்வர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.


* ஆட்டோ, டாக்ஸி நல வாரியம்.


* பட்டியலின ஜாதி மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு பா.ஜ., அறிவித்துள்ளது.
ஏற்கனவே, பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ரூ.500 மானிய விலையில் காஸ் சிலிண்டர், 60-70 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.2,500 பென்சன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன், கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம் நிதி என பா.ஜ., அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement