கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா: கள் குடித்துவிட்டு சீமான் கேள்வி
விழுப்புரம்: கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
@1br@விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அவர் கள் குடித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:
தேசிய பானமான கள்ளுக்கு, தமிழகத்தை தவிர இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அனுமதி இருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவதை ஆய்வு செய்யாத அரசு டாஸ்மாக் விற்பனை குறைவதை ஆய்வு செய்கிறது. கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா?அருகிலிருக்கும் எல்லா மாநிலங்களிலும் கள் அனுமதி உண்டு, தமிழகத்தில் மட்டும் இல்லை. காரணம் மற்ற மாநில முதல்வர்களுக்கு சாராய ஆலை இல்லை இங்கு இவர்களுக்கு சாராய ஆலை இருக்கிறது.
இந்தியாவில் ஆளும் எந்த மாநில முதல்வருக்கு சாராய ஆலை இருக்கிறதா? தமிழகத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக இந்த அரசு டாஸ்மாக்கில் மட்டும் பாஸ்மார்க் வாங்குகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்பனை செய்கிறார்கள்.
சட்டசபையில் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடுகிறோம் என அமைச்சர் பேசுகிறார். இந்த பொங்கலுக்கு 2 நாட்களில் ரூ.725 கோடிக்கு குடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதற்கு இலவசம்? கள் இறக்குவது வேளாண்மை சார்ந்த தொழில். இவ்வாறு சீமான் பேசினார்.
வாசகர் கருத்து (28)
Mohan - Salem,இந்தியா
21 ஜன,2025 - 18:55 Report Abuse
சீமான் கட்சிக்கு ஓட்டு போட்டால் கள்ளு மட்டும்தான் குடிக்க வேண்டியிருக்கும். ஆனால் அடி வருடிகள், திமுக மறுபடி ஆட்சிக்கு வந்தால், கொக்கைன் போதை மருந்து கலந்த IMFL டாஸ்மாக் கலப்பட சாராயம் சாப்பிடலாம். திமுக உறுப்பினர் கூட கூட்டு சேர்ந்து போக்ஸோ குற்றங்களை மாட்டிக்காம செய்யலாம். மாட்டினாலும் குற்றமற்றவன்
என சொல்லி வெளியில்விட நன்றியுள்ள நீதியதிகாரிகள் உள்ளனர். கவலைப்பட வேண்டாம்.
0
0
Reply
Sidharth - ,இந்தியா
21 ஜன,2025 - 18:48 Report Abuse
நீ யாருப்பா கள்ளு குடிச்சிட்டு கல்லூரிக்கு போனவன். நீ பேசு
0
0
Reply
Sivaprakasam Chinnayan - ,இந்தியா
21 ஜன,2025 - 18:41 Report Abuse
Right Sir. Why the TN Government is not selling the native Toddy. See Pondicherry and Kerala are selling . You might very much aware the politics behind on this.
0
0
Reply
அப்பாவி - ,
21 ஜன,2025 - 18:34 Report Abuse
தவறு. எல்லாரும் சாராயம்தான் குடிக்கணும். திருவள்ளுவரே கள்ளுண்ணாமை பற்றிதான் பாடினார். சாராயம் ஓக்கே. கஞ்சா கூட ஓக்கே.
0
0
Reply
veera - ,
21 ஜன,2025 - 17:40 Report Abuse
வைகுண்டம் தான் அடுத்த பல்கலை முட்டு வேந்தர்....
0
0
Reply
கோமாளி - erode,இந்தியா
21 ஜன,2025 - 17:36 Report Abuse
இங்கு பேசுபவர்கள் பெரும்பாலும் கள்ளை டாஸ்மாக்கில் விற்கப்படும் வெளிநாட்டு மதுவோடு ஒப்பிடுகிறார்க
ஒன்று முதல் மூன்று சதவிகிதம் ஆல்கஹால் உள்ள கள்ளை, 60% ஆல்கஹால் கொண்ட டாஸ்மாக் சாராயத்தோடு ஒப்பிடாதீர்கள்
0
0
kantharvan - amster,இந்தியா
21 ஜன,2025 - 18:02Report Abuse
கோமாளி பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லனுமா? என்ன?
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
21 ஜன,2025 - 17:26 Report Abuse
போதை வஸ்துக்களைக் கலக்காமல் கள் அருந்தினாலும் அதில் சிறிதளவாவது போதை இருப்பதால் அது ஹராம்தான் ....
0
0
Reply
R.Balasubramanian - Chennai,இந்தியா
21 ஜன,2025 - 17:20 Report Abuse
when we raise questions about Tamil Nadu, answer only relating to Tamil Nadu. Why compare other state? Is it not dereliction of duty by elected TN government?
0
0
veera - ,
21 ஜன,2025 - 17:38Report Abuse
because vaigu is ex gst officer, gazetted, may be CBI officer..... but but. he is comedy piece for all us ....
0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
21 ஜன,2025 - 16:56 Report Abuse
ஒழிஞ்சது திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசு இந்த கேள்வியால்
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
21 ஜன,2025 - 16:43 Report Abuse
//How can you justify liquor sale by Government?// Whats wrong in liquor sale by govt? All over India, all the State govts. including Mahatma Gandhis Gujarat, liquor is being sold by govt only. And highest liquor selling state in Uttarpradesh. Here, even in all Metro stations, liquor shops of UP govt is there till 11 night.
0
0
Sakthi - Tiruppur,இந்தியா
21 ஜன,2025 - 19:21Report Abuse
தொரை இங்கிலிஷ் எல்லாம் பேசறீங்க. என்ன இந்த முட்டு மட்டும் ஆங்கிலத்தில். கொத்தடிமைகள் இருப்பது தமிழ் நாட்டில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . இங்குள்ள பிரச்சனைகளை இங்குள்ள அரசாங்கம் தான் சரி செய்ய வேண்டும். அதற்கு தான் நாற்காலி கொடுக்க பட்டு உள்ளது. இல்லை என்றால் இவர்கள் தூக்கி எறிய ஆடுவார்கள்.
0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement