சபரிமலை வருமானம் அதிகரிப்பு: கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி அதிகம்
சபரிமலை: சபரிமலையில், மகரவிளக்கு சீசனில் வருமானம் ரூ.440 கோடி கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி கூடுதல் ஆகும்.
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த நவ.,15 திறக்கப்பட்டு டிச., 26 ம் தேதி வரை திறக்கப்பட்டது. பிறகு, மகர விளக்கு பூஜைக்காக டிச.,30ம் தேதி நடை மீண்டும் திறக்கப்ப்டது. கடந்த 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடந்தது. கடந்த 18 ம் தேதி மண்டல மகர விளக்கு நெய் அபிஷேகமும் நடந்தது.
இந்நிலையில், மாநில தேவசம் போர்டு துறை அமைச்சர் விஎன் வசவன் கூறியதாவது: மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 80 கோடி ரூபாய் அதிகம் ஆகும். இக்காலகட்டத்தில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு நாளில் அதிகபட்சமாக 1.8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
18 ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 -90 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு 65 பேர் மட்டுமே சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.கோயிலில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தேவசம் போர்டு சார்பில் கவுரவம் செய்யப்பட்டது.