இணையத்தில் வைரலாகும் அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் குழந்தைகள் புகைப்படம்: காரணம் என்ன?

2

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் துணை அதிபர் வேன்ஸின் குழந்தைகள் தூங்கி வழிந்தது மற்றும் விளையாடியது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணை அதிபராக ஜேடி வேன்ஸ் பதவியேற்றுக் கொண்டார். இவரின் மனைவி உஷா, குழந்தைகள் ஈவன், விவேக் மற்றும் மிராபெல் ஆகியோரும் பங்கேற்றனர்.
Latest Tamil News


அதில் குழந்தைகளின் சில செயல்களால் அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில் ஒரு மகன், நிகழ்ச்சி துவங்க தாமதமானதால், அங்கேயே, கொட்டாவி விட்டு தூங்கி வழிந்தார். அதேபோல், மிராபெல் அங்கும், இங்கும் ஓடி விளையாடினார்.

Latest Tamil News
மேலும், துணை அதிபராக வேன்ஸ் பதவியேற்ற போது, உஷா கணவரையே உற்று பார்த்து கொண்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. பலரும், குழந்தைகளை வாழ்த்தி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement