வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 32 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

1

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக 6 மாதங்களுக்கு பிறகு அறிவிக்கப்பட்டு உள்ளது.


கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 263 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 32 பேரை காணவில்லை.


காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலை, அவர்களின் உறவினர்கள் அளித்த புகார்கள், எப்ஐஆர்., அடிப்படையில், கிராம அதிகாரி, பஞ்சாயத்து செயலர் ஆகியோர் கொண்ட குழுவினர் தயாரித்து உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியாது என அறிவித்து உள்ளனர். இந்த பட்டியலை அரசு உயர் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.


இந்நிலையில், இதனையடுத்து காணாமல் போனவர்களை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்க மாநில அரசு முடிவு செய்தது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அரசு இன்று வெளியிட்டு உள்ளது.


காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்து அவர்களின் உறவினர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு, அவர்ளுக்கு நிதியுதவி மற்றும் வீடு உள்ளிட்ட வசதிகள் அவர்களுக்கு கிடைக்கும்.

Advertisement