ராமேஸ்வரத்தில் பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் தினமும் 500 க்கு மேற்பட்ட வெளி நோயாளிகள், 150 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு 13 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனால் ராமேஸ்வரத்தில் நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுவதை கண்டித்து நேற்று ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை அருகில் பா.ஜ., நகர் தலைவர் மாரி தலைமையில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பா.ஜ., நிர்வாகிகள் சுந்தர வாத்தியார், நாகேந்திரன், ராமு, ஸ்ரீதர், கணேசன், சங்கிலி, முருகன், தமிழக வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன், மீனவ பெண்கள் பலர் பங்கேற்றனர்.