கோவில் உண்டியலை உடைத்து தீ வைப்பு
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் சுவாமி துணிகளுக்கு தீ வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் ஏரி கரையில் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் அருகே விவசாய பயிர் செய்து வரும் ஏழுமலை, கோவிலில் இருந்து புகை வருவதை கண்டு அங்கு சென்றார்.
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுவாமி புடவை, துணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Srprd - ,
22 ஜன,2025 - 10:36 Report Abuse
Anything is possible in Tamil Nadu against Hindus.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement