மோதிப்பார்த்து விட வேண்டியது தான்; ஈ.வெ.ரா., குறித்து நிருபர்கள் கேள்விக்கு சீமான் பதில்

49

சென்னை: ஈ.வெ.ரா.,வா? பிரபாகரனா? மோதிப்பார்த்து விட வேண்டியது தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.


சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: திருமுருகன் காந்திக்கு நான் எதற்கு பயப்பட வேண்டும்; ஈ.வெ.ரா., குறித்து அவதூறு பேசியதாக வழக்கு தொடர்ந்தால்,கோர்ட்டில் பதில் அளிக்கப்போகிறேன். பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் குறித்து 15 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர். எதற்கு இவர் இந்த போட்டோவை வெட்டி, ஒட்டி கொடுக்கணும். இந்த படத்தை அவர் எங்கிருந்து எடுத்தார். எப்படி ஒட்டி கொடுத்தார். அவர் வெங்காயம் படம் எடுத்தார்.


அதனால் வெங்காயங்களுக்கு ஆதரவாக பேசுகிறார். எத்தனை பேர் எடிட் செய்தீர்கள்? நீங்க எல்லாம் பெரிய எடிட்டரா? என்ன காமெடி பண்ணி கொண்டு இருக்கிறார்கள். ஈ.வெ.ரா., மீது அடி விழுந்த உடன், இங்க பிரபாகரன் பொய் என்று வருகிறீர்கள். ஈ.வெ.ரா.,வா? பிரபாகரனா? மோதிப்பார்த்து விட வேண்டியது தான். குறுக்கே வருவது சித்தப்பன், மாமா, பெரியப்பனாக இருப்பதால் மோதி பார்க்க யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அடிப்படை ஆதாரமின்றி ஏதாவது பேசுவதா? என்னுடைய விவாதத்திற்கு தகுதியான நபர் இல்லை.

இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement