புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை கடந்தது!
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,435 ரூபாய்க்கும்; சவரன் 59,480 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜனவரி 20ம் தேதி திங்கள் கிழமை, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 7,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 59,600 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (ஜன.,21) தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில், இன்று (ஜன.,22) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.7,525க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு, நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்துள்ளது.