கிரடாய் சார்பில் மதுரையில் வீடு, வீட்டடி மனைகள் கண்காட்சி ஜன.31 ல் துவங்குகிறது
மதுரை: இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) சார்பில் வீடு மற்றும் வீட்டடி மனைகள் கண்காட்சி(பேர்புரோ புராப்பட்டீ எக்ஸ்போ 2025) மதுரை தமுக்கம் கன்வென்ஷன் ஹாலில் ஜன., 31 முதல் பிப்., 2 வரை நடக்கிறது.
இதுகுறித்து 'கிரடாய்' மதுரை சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்துவிஜயன், செயலாளர் யோகேஷ், பொருளாளர் ஜெயகுமார் கூறியதாவது:
'கிரடாய்' சார்பில் ஒன்பதாவது ஆண்டாக மதுரை தமுக்கம் கன்வென்ஷன் ஹாலில் ஜன., 31 ல் வீடு மற்றும் வீட்டடி மனைகள் (புராப்பட்டீ எக்ஸ்போ 2025) கண்காட்சி துவங்குகிறது. அன்று மதியம் 12:15 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. பிப்., 2 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. 40 டெவலப்பர்கள், வங்கிகள், கட்டுமான பொருட்கள் நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெறும்.
ஒரே கூரையின் கீழ் வீட்டடி மனைகள்(பிளாட்கள்), வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்படும்.
ரூ.19.9 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள வீடுகள், ரூ.3 லட்சம் முதல் பிளாட்களை தேர்வு செய்யலாம். வீடுகள், பிளாட்டுகளை நேரடியாக பார்வையிட வாகன வசதி உண்டு. வங்கிக் கடன் வசதி செய்யப்படும். மதுரை, சென்னை, கோவையைச் சேர்ந்த புரமோட்டர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பிட்ட சொத்துக்களை வாங்கினால் வாடகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே குறித்த காலவரம்பு வரை செலுத்தும். பிளாட் வாங்க இ.எம்.ஐ., வசதி உண்டு.
பிப்., 1 மாலை 6:00 மணிக்கு 'பசுமை வீடுகள்' தலைப்பில் நடிகர் சரத்குமார் பேசுகிறார். பிப்., 2 ல் 'கிரடாய்' விளம்பர துாதர் நடிகை சுகாசினி பங்கேற்கிறார்.
பார்வையாளர்களில் தினமும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசாக நகர் ஊரமைப்பு இயக்கக அனுமதி பெற்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாட்கள் வழங்கப்படும். நிகழ்ச்சியை ஸ்டேட் வங்கி, அனுஜ் டைல்ஸ் இணைந்து வழங்குகின்றன. அனுமதி இலவசம். பார்வையாளர்கள் 'கியூஆர் கோடு'வில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உண்டு. இவ்வாறு கூறினர். துணைச் செயலாளர் அழகப்பன் உடனிருந்தார்.