ஓ.கீரனுார் - தி.அகரம் சாலை கந்தல்

பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் இருந்து திருமலைஅகரம் வழியாக பெண்ணாடம் செல்லும் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. மேலும், இப்பகுதி மக்களும் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.

இச்சாலையில் ஓ.கீரனுார் - திருமலைஅகரம் வரையிலான சாலை பராமரிப்பின்றி, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, குண்டும் குழியுமான சலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement