கோரிக்கைகள் நிறைவேற கோவிலில் சிறப்பு பூஜை
நெய்வேலி : என்.எல்.சி., ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி, என்.எல்.சி., பாரதிய மஸ்துார் சங்கத்தின் சார்பில். வேலுடையான் பட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில், என்.எல்.சி., பி.எம்.எஸ்., சங்கத்தின் தலைவர் வீரவன்னிய ராஜா தலைமை தாங்கினார்.
சங்க பொதுச் செயலாளர் சகாதேவராவ், பொருளாளர் தியாகராஜன், செயல் தலைவர் அன்பழகன், அலுவலக செயலாளர் சண்முகம் அமைப்பு செயலாளர் ராஜ், ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அருள்முருகன், விக்னேஸ்வரன் கலந்து கெண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக பி.எம்.எஸ். தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், பி.எம்.எஸ்., சங்க கடலூர் மாவட்ட பார்வையாளர் சேலம் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பி.எம்.எஸ்., சங்கத்தின் சார்பில் நடந்த இந்த நுாதன வேண்டுதல் தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.