காட்டிக் கொடுத்தது 'காப்பி பேஸ்ட்' அறிக்கை; தினமலர் செய்தியை குறிப்பிட்டு இ.பி.எஸ்., மீது ஸ்டாலின் தாக்கு

17


சிவகங்கை: இன்னொரு கட்சித் தலைவரின் அறிக்கையை இ.பி.எஸ்., காப்பி அடித்து அறிக்கை வெளியிடுகிறார் என சிவகங்கை அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் குறிப்பிட்ட அந்த செய்தி, தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: சிவகங்கை மண்ணுக்கு வீரமும், புகழும் உண்டு. வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று உதவுவது தான் திராவிட மாடல் அரசு, எல்லோருக்கும் எல்லாம் என்று பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.


Tamil News

ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக நண்பனாக இருக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தால் 2.38 லட்சம் பேர் மாதந்தோறும் 1000 ரூபாயை பெறுகின்றனர். திருப்பத்தூரில் புதிய கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்படும். திருப்பத்தூரில் ரூ.50 கோடி செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும்.

மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறித்தான் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறோம். பாவம் இ.பி.எஸ்.; இன்னொரு கட்சித்தலைவரின் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுகிறார்... படிக்கிறார்... பேசுகிறார்...


பிரபல நாளிதழ், தங்கள் இணையதள பக்கத்தில், இ.பி.எஸ்., காப்பி அடித்த அறிக்கையை செய்தியாக வெளியிட்டு விட்டார்கள். காப்பி, பேஸ்ட் அறிக்கையை வெளியிடுவதன் மூலமே இ.பி.எஸ். குற்றச்சாட்டுகள் எப்படிப்பட்டவை என்பது தெரியும். மற்றொரு கட்சியின் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுகிறார் இ.பி.எஸ்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நாளிதழ் பெயர் குறிப்பிடாமல், அதன் இணைய பக்கத்தில் வெளியானது என முதல்வர் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதுதான் அந்த காப்பி பேஸ்ட் அறிக்கை



காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; மாட்டிவிட்ட இ.பி.எஸ்., அட்மின் என்ன ஆவார்? என்ற தலைப்பில், தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதை பார்க்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/the-copy-paste-report-betrayed-what-will-happen-to-the-eps-admin-who-got-stuck-/3834603




காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை என்ற தலைப்பில் தினமலர் சமூக வலை தளப்பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்,

பேஸ்புக்


https://www.facebook.com/photo.php?fbid=1126348076203840&set=pb.100064859731256.-2207520000&type=3


இன்ஸ்டாகிராம்:

https://www.instagram.com/p/DFCTaLZSPGC/

எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) -

https://x.com/dinamalarweb/status/1881214991036199245/photo/1

Advertisement