மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

ரிஷிவந்தியம் : அரியலுாரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது.

வாணாபுரம் அடுத்த அரியலுாரில் மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். இதில், 1 முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 57 பேர் பங்கேற்றனர். எலும்பு முறிவு மருத்துவர் சிவராமன், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவர் ராஜேஸ்வரி, கண் மருத்துவர் ஹெலன் கிளாரிசா, மனநல மருத்துவர் சித்ரா, குழந்தைகள் நல மருத்துவர் ரேவதி மாணவர்களை பரிசோதித்து, ஆலோசனைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகளை தெரிவித்தனர். அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை பெற ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.

Advertisement