குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தை மீது தாக்குதல் பாசக்கார மகன்கள் கைது
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே குடிக்க பணம் கேட்டு தந்தையை தாக்கிய அண்ணன், தம்பி போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் வசித்து வருபவர் மாணிக்கம், 65; இவருக்கு கணேசன், 28; புருேஷாத்தமன், 25; என இரு மகன்கள் உள்ளனர்.
குடிபழக்கம் உள்ள மகன்கள் இருவரும் அடிக்கடி தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு தகறாறு செய்வது வழக்கம். நேற்று முன் தினம் சகோதரர்கள் இருவரும் தந்தை மாணிக்கத்திடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
கொடுக்க மறுத்த தந்தையை சகோதரர்கள் இருவரும்சேர்ந்து திட்டி,கட்டையால் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமவையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தந்தையை தாக்கிய பாசக்கார மகன்களை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement