உங்களைத்தேடி திட்ட முகாம் ஒத்திவைப்பு
கடலுார் : காட்டுமன்னார்கோவிலில் இன்று நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் அரசின் அனைத்து நலத்திட்டங்கள்.
சேவைகள், மக்களின் தேவைகள் குறித்த கள ஆய்வு இன்று (22ம் தேதி) நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் திட்ட கள ஆய்வு ஒத்தி வைக்கப்படுகிறது என, கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement