கிராமசபைக் கூட்டம் : கலெக்டர் உத்தரவு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், குடியரசு தினவிழா (26ம் தேதி) அன்று காலை 11:00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிராம சபைக் கூட்டத்தை பொதுவான இடங்களில், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, ஊராட்சிகளை கவனிக்கும் தனி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-2026ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement