வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி, ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் வளாகத்தில் நேற்று கண் மருத்துவ முகாம் நடந்தது.

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவனை மருத்துவர்கள் பங்கேற்று, 180க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு பார்வை திறன் பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம், விதிமுறைகள், ஓட்டுனர்களின் உடல் தகுதி, கண் பார்வை உள்ளிட்டவை குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement