நாகையில் திமிங்கல எச்சம் பதுக்கிய 5 பேர் சிக்கினர்

நாகப்பட்டினம், :நாகை அடுத்த வேளாங்கண்ணி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, ஐந்து நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரான, 9 கிலோ எடையுடைய ஆம்பர் கிரிசை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதை பதுக்கிய நாகை வீரமணி, கார்த்திகேயன், புதுச்சேரி பெலிக்ஸ் பவுல்ராஜ், தஞ்சாவூர் தமிழரசன், முத்துப்பேட்டை கண்ணன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆம்பர் கிரிசை பறிமுதல் செய்தனர்.

Advertisement