ஸ்ரீவில்லிபுத்துாரில் மூவர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் பெருமாள் பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் காளியப்பன் 48,
டீ மாஸ்டரான இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளான நிலையில் நேற்று முன் தினம் விஷம் குடித்து அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவம், மேலரத வீதியை சேர்ந்தவர் கொன்னையாண்டி 60, பள்ளி வேன் டிரைவரான இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்
நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3வது சம்பவம், அய்யம்பட்டி செக்கடி தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் 51, எண்ணெய் வியாபாரம் செய்து வந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு ஆளான இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement