கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு, கே. புதூரில் கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு வில்வராயன் குளம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் 16 வீடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் கட்டடம், சமுதாயக்கூடம், அம்மன் கோயில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது.
குன்னூர் புதுாரில் வெண்ணிக்கொண்டான் குளம் கண்மாயில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவ்விரு ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.
இவர்களுக்கு ராஜபாளையம் தென்றல் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் வீடுகள் வழங்கவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி ஒத்திவைக்கப்பட்டது.