போலீஸ் செய்திகள்
மணல் திருடிய இருவர் கைது
சிவகாசி: எம்.புதுப்பட்டி எஸ்.ஐ., செல்வராஜ், போலீசார் எம்.மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அர்ஜுனா நதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருவர் நதியில் பிளாஸ்டிக் பைகளில் மணல் அள்ளி லோடு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். மணல் திருடிய லோடுவேன் உரிமையாளர் எம்.ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்த சந்திரன் 56, டிரைவர் அஜித்குமார் 26, ஆகியோரை போலீசார் கைது செய்து லோடு வேனை பறிமுதல் செய்தனர்.
----------பட்டாசு தொழிலாளி தற்கொலை
சிவகாசி: சாட்சியாபுரம் ஆசாரி காலனியைச் சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி வனராஜா 35. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இவரது மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த வனராஜா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது போதையில் டூவீலர் ஓட்டியவர் பலி
விருதுநகர்: திருப்பரங்குன்றம் ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் 30. இவர் டூவீலரில் ஜன.1ல் நண்பருடன் (மது போதையில்) நான்கு வழிச்சாலையில் (ெஹல்மெட் அணிய வில்லை) ஓட்டிச் சென்றார்.
சத்திரரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகே சென்ற போது பேரிகார்டில் மோதி காயமடைந்தார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் ஜன.21 மாலை 6:30 மணிக்கு பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.-------
வீடு புகுந்து திருட்டு
சிவகாசி: கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் முகமது ஜாபர் சித்திக் 33. இவர் வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது பின் பக்க கதவு திறந்த நிலையில் இருந்தது. பெட்ரூமில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.