10 வயது சிறுமிக்கு சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவர் கைது

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் 10 வயது சிறுமியை கொடுமைப்படுத்தி காலில் சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையம் மலையடிபட்டியை சேர்ந்தவர் முருகானந்தி 30, ஆடல் பாடல் இசை கச்சேரியில் பணிபுரிகிறார்.

திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் உடன் பணிபுரியும் வேல்ராஜ் 35, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதிலும் ஆறு மாதத்திலும் இரு குழந்தைகள் உள்ளனர்.

முருகானந்தியின் முதல் கணவருக்கு பிறந்த 10 வயது சிறுமிக்கு வேல்ராஜ் கடுமையான வேலைகளை செய்யுமாறு துன்புறுத்தி காலில் சூடு வைத்துள்ளார்.

அப்பகுதி மக்கள் குழந்தை பாதுகாப்புக்கான இலவச எண்ணில் புகார் அளித்தனர்.

சமூக நலத்துறை அலுவலர் இளங்கோ தலைமையில் விசாரணை நடத்தியதில் சிறுமியை துன்புறுத்தி சூடு வைத்தது உறுதியானது.

இதனை அடுத்து ராஜபாளையம் மகளிர் போலீசார் வேல்ராஜை கைது செய்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement