வீட்டில் தீ விபத்து
சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 33. பட்டாசு தொழில் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் இவரும் இவரது மனைவியும், நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டனர்.
அவரது இரு குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றனர். மதியம் 3:30 மணிக்கு அவரது வீட்டில் வாஷிங் மெஷினில் தீ பிடித்து துணிகள் எரிந்து நாசமானது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
விசாரணையில் காலையில் வேலைக்குச் செல்லும் போது வாஷிங்மெசினில் துணியை போட்டு ஆன் செய்து சென்றுள்ளனர்.
அப்பகுதியில் இருமுறை மின்தடை ஏற்பட்ட நிலையில் மின் கசிவால் தீப்பிடித்தது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement