தி.மு.க., மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது
அருப்புக்கோட்டை: தி.மு.க., மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது, என அருப்புக்கோட்டையில் நடந்த எம்ஜிஆர்., பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசினார்.
அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.பி., முத்துமணி, நகர செயலாளர் சோலைசேதுபதி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா இருவரும் எனக்கு பின்னால் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., இருக்கும் என கூறினர். அருப்புக்கோட்டையில் 13 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக அ.தி.மு.க .,பெற்றுள்ளது என்றால் எம்.ஜி.ஆர். போட்ட விதை.
2026ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மக்களுக்கு தி.மு.க., ஆட்சி மீது அதிருப்தி, வெறுப்பு வந்துவிட்டது.
தெலுங்கானா மாநிலத்தை பெற்று கொடுத்தவர் சந்திரசேகர ராவ். ஆனால் அங்கு ஆட்சி மாற்றம் வந்துவிட்டது.
தங்கள் குடும்பம் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைப்பது தி.மு.க., அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது அ.தி.மு.க., பாலியல் பலாத்காரம், கஞ்சா, குடிபோதை என அனைத்தும் நடப்பது தி.மு.க., ஆட்சியில் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என கூறியவர்கள், தற்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிப்போம் என ஆம்லெட்டை திருப்பிப் போட்டது போல கூறுகின்றனர்.
மக்கள் இதை நம்ப தயாராக இல்லை. என பேசினார்.