திருச்சுழியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சுழி: திருச்சுழி அருகே சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியதை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருச்சுழி எஸ்.ஐ., வீரணன் தலைமையில் போலீசார் திருச்சுழி - காரியாபட்டி ரோட்டில் நேற்று காலை 5:30 மணிக்கு வாகன சோதனை செய்தனர்.
அப்போது கமுதியிலிருந்து திருச்சுழி வழியாக மதுரை நோக்கி சென்ற வேனை சோதனை செய்தனர்.
அதில் 50 கிலோ கொண்ட மூடைகளாக 2 டன் அளவுள்ள ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து டிரைவர் மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த கபிலனை 21, கைது செய்தனர்.
விசாரணை செய்ததில், கமுதி சுற்று பகுதிகளில் சேகரித்த ரேஷன் அரிசியை மதுரைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் உணவு வழங்கல் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்தனர். கபிலனை கைது செய்து விசாரிக்கின்றனர்.