இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகரில் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி ஜன. 17 முதல் 21 வரை நடந்தது.

இதில் 27 இளைஞர்கள் சென்னையில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மக்கள், மொழி வழக்கு, உணவு, கலாசாரம் பண்பாடு பற்றி அறிய வந்தனர். நிறைவு விழா மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞர் அலுவலர் ஞான சந்திரன் வரவேற்றார். முகாமில் பங்கு பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நீதிபதி கவிதா பேசினார்.

Advertisement