ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் மற்றும் பாண்டிச்சேரி பைக்கேர் டெக்னீஷியன் அசோசியேஷன் சார்பில்ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரியில் கடந்த 12ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் அமலுக்கு வந்துள்ளது.
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி போக்குவரத்து மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன், பாண்டிச்சேரி பைக்கேர் டெக்னீஷியன் அசோசியேஷன் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் ஊர்வலம் நடந்தது.
காவல் நிலையம் எதிரே துவங்கிய ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பைக் டெக்னீசியன்கள் பங்கேற்றனர். ஊர்வலம் திருக்கனுாரில் துவங்கி, வழுதாவூர், பத்துக்கண்ணு,மேட்டுப்பாளையம் வழியாக புதுச்சேரியை சென்றடைந்தது.