கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
பாகூர்: பாகூர் கொம்யூனுக்குட்பட்ட, கிராம பஞ்சாயத்துக்களில் வரும் 26ம் தேதி நடைபெறும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க பொது மக்களுக்கு, ஆணையர் சதாசிவம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, பாகூர் கொம்யூனுக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துக்களில், 5 கட்டங்களாக கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புபாளையம், காட்டுக்குப்பம், குருவிநத்தம், மணமேடு, மூர்த்திக்குப்பம், பனித்திட்டு, கிருமாம்பாக்கம், பரிக்கல்பட்டு, கரையாம்புத்துார், சோரியாங்குப்பம், பாகூர் கிழக்கு, பாகூர் மேற்கு, சேலியமேடு, கன்னியக்கோவில் ஆகிய இடங்களில் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்டங்களில் தொடர்புடைய பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று தங்களது கிராமங்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.