அறிவியல் கண்காட்சி

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அடுத்த மணவெளி அரசு துவக்கப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து, பேசினார்.

தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.பள்ளியில், எல்.கே.ஜி., முதல், 5ம் வகுப்பு வரை பயிலும், 250க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், சந்திரயான் விண்கலத்தின் பயன்கள், தொழிற்சாலைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்வது, சுற்றுச்சூழல் மாசுபாடுகளை எவ்வாறு கட்டுபடுத்துவது, விவசாயம், இயற்கையான உணவு பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினர்.

Advertisement