சித்தர் கோவிலில் குரு பூஜை விழா 

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் கோவிலில், பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி அடைந்த 218வது ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.

காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை யாக வேள்வியுடன் கூடிய அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை, சிவன் அடியார்கள் வழிபாடு நடந்தது.

இதில், அமைச்சர் நமச்சிவாயம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்ட சோம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் திருத்தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement