வீடு கட்டுவதற்கான நிதி ஆணை வழங்கல்
பாகூர்: குடிசை மாற்று வாரியம் சார்பில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தவணை தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, 51 பயனாளிகளுக்கு, முதல் மற்றும் இரண்டு தவணைகளாக 70 லட்ச ரூபாயிக்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் சுதர்சன், இளநிலை பொறியாளர் கோபிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement