நேதாஜி பிறந்த நாளையொட்டி கவர்னர், முதல்வர் மரியாதை
புதுச்சேரி: புதுச்சேரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு கவர்னர் மற்றும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அரசு சார்பில், லாஸ்பேட்டை, உழவர் சந்தை சந்திப்பில் உள்ள அவரது உருவ சிலைக்கு கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் திருமுருகன், சாய் சரவணன் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்., சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், மாநில காங்., செயலாளர் நந்தா கலைவாணன் உள்ளிட்டோர், நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பா.ஜ., சார்பில் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., பொதுச் செயலாளர் மவுலிதேவன், செயலாளர் வெற்றிச்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேதாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் கம்யூ., உட்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.