நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பதுங்கியிருந்த ரவுடி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, குபேர் நகரில் உள்ள லோகமுத்து மாரியம்மன் கோவில் பின்புறம் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, போலீசாரை கண்ட 3 பேர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

அவர்களை விரட்டி பிடித்த போலீசார், அவர்களிடம் சோதனை நடத்தியபோது, கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்டேஷன் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ரவுடியான மணிகண்டன் (எ) ஸ்டிக்கர் மணி, 24; ரெட்டியார்பாளையம், முத்துபிள்ளைபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா, 22; அரும்பார்த்தபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜேம்ஸ், 22; என்பது தெரியவந்தது.

இவர்கள் கடந்த 19ம் தேதி கோவிந்தசாலை, கண்டக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த லோகுபிரகாஷ், தனது கூட்டாளிகளுக்குடன் இணைந்து ஸ்டிக்கர் மணியை தீர்த்தக் கட்ட நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு, பழி தீர்க்கும் வகையில் பதுங்கி இருந்தும் தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement