உழவர்கரை தொகுதியில் அன்னதானம் வழங்கல்

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி அன்னதானம் வழங்கினார்.

புதுச்சேரி, மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் நிறுவனரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கேசவன், 72 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்விக் குழுமத்தின் துணை தலைவர் சுகுமாறன், செயலாளரும், என்.ஆர். காங்., பிரமுகருமான நாராயணசாமி கேசவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, உழவர்கரை தொகுதியில் 6 இடங்களில் 2,000 பேருக்கு நாராயணசாமி, பொது மக்களுக்கு அன்னதானம் வழகினார். இதில், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement