அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி: அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த, ஓவியக் கண்காட்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

அரும்பார்த்தபுரம் திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடந்தது. பொறுப்பாசிரியர் சுரேஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சிவசங்கரன் எம்.எல்.ஏ., கண்காட்சியை துவக்கி வைத்தார்.

முதன்மை கல்வி அலுவலர் மோகன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் அசுந்தா தொகுத்து வழங்கினார். கண்காட்சியில், மாணவர்களின் நுாற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

ஏற்பாடுகளை, ஆசிரியர் அன்பழகன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் சுகிலீலா நன்றி கூறினார்.

Advertisement