பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறித்து பயிற்சி பட்டறை
புதுச்சேரி: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுச்சேரி பெண்களுக்கான அதிகார மையம் இணைந்து, பாலியல் துன்புறுத்தல், சட்டம் குறித்த பயிற்சி பட்டறை நடத்தின.
பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல், சட்டம் - 2013 குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஓட்டல் அண்ணா மலையில் நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் முத்து மீனா வரவேற்றார். நலத்துறை செயலர் முத்தம்மா, பயிற்சியை துவக்கி வைத்தார்.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள், ஆரோக்கிய ரவி, ரீனா ஐஸ்வர்யா ஆகியோர், பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் சட்டம், செயல்பாடு அதன் முக்கியத்துவம் குறித்து விவரங்களை எடுத்து கூறினர்.
இதில், உள் புகார் குழு, மாவட்ட அளவிலான புகார் குழு செயலியின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலமாக செயல்படுத்தப் படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து துறை அதிகாரிகள் பேசினர்.
பயிற்சியில் 80க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதவி இயக்குனர் சாலமன் சவரிராஜ் நன்றி கூறினார்.