பள்ளி, கல்லுாரி வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான பள்ளி, கல்லுாரி வாகன டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் தற்போது சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, போக்குவரத்து துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அனைத்து கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்றுநர் நரசிம்மன் கலந்து கொண்டு, வாகன ஓட்டு நர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement