இன்று த.வெ.க., நிர்வாகிகள் பட்டியல்! வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு

6


சென்னை: த.வெ.க., மாவட்ட செயலாளர்களின் முதல் பட்டியலை, இன்று (ஜன.,24) சென்னை பனையூர் அலுவலகத்தில் நடிகர் விஜய் வெளியிடுகிறார்.


த.வெ.க., கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், மாவட்ட செயலர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் உள்ளனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. அதேபோல் மாநில நிர்வாகத்திலும், பல்வேறு பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில், 100 முதல் 120 பேர் வரை நியமிக்கப்பட உள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில், த.வெ.க., தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் முதல் பட்டியலை, இன்று (ஜன.,24) சென்னை பனையூர் அலுவலகத்தில் நடிகர் விஜய் வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement