வக்பு சட்டத்திருத்த மசோதா ஆய்வு: கூட்டுக்குழுவில் இருந்து எம்.பி.,க்கள் 10 பேர் சஸ்பெண்ட்

15


புதுடில்லி: வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான பார்லி கூட்டுக்குழு கூட்டத்தில் விதிமுறைகளை மீறி கோஷம் எழுப்பிய தி.மு.க., எம்.பி., ஆ.ராசா உட்பட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பார்லி., கூட்டுக்குழு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜன.,24) பார்லிமென்ட் வளாகத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா மீதான கூட்டுக் குழுவின் கூட்டம், குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்றது.


அப்போது அரசுக்கு எதிராகவும், கூட்டுக்குழு தலைவருக்கு எதிராகவும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு கூட்டுக்குழு தலைவர் ஆட்சேபம் தெரிவித்தார். அப்போதும் அவர்கள் கோஷத்தை நிறுத்தவில்லை.
இதையடுத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட தி.மு.க., எம்.பி., ஆ.ராசா உட்பட 10 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், கூட்டம் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பெயர் பின்வருமாறு:



* 1. அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.,)


* 2. கல்யாண் பானர்ஜி (திரிணமுல் காங்கிரஸ்)


*3. நதிமுல் ஹக் (திரிணமுல் காங்கிரஸ்)


* 4. மொஹிப்புல்லா நத்வி (சமாஜ்வாதி கட்சி)


5. * சையத் நசீர் உசேன் (காங்கிரஸ்)

6. இம்ரான் மசூத் (காங்கிரஸ்)



7. முகமது ஜாவேத் (காங்கிரஸ்)

8. அரவிந்த் கண்பத் சாவந்த் (சிவசேனா உத்தவ் தாக்கரே அணி)



9. ஆ.ராசா (தி.மு.க.,)

10. எம்.எம்.அப்துல்லா (தி.மு.க.,)

Advertisement