குடியரசு தினவிழா ஒத்திகை...
நாளை மறுதினம் குடியரசு தின விழாவினை கொண்டாட நாடே கோலகலமாக தயராகிவருகிறது.
சென்னையில் அதற்கான ஒத்திகை காமராஜர் சாலையில் நடைபெற்றது,வழக்கமாக கண்ணகி சிலை அருகே நடைபெறும் அங்கு தற்போது மெட்ரோ வேலை நடைபெறுவதால் உழைப்பாளர் சிலைக்கு இடம் மாற்றமாகியுள்ளது.
சரியாக எட்டு மணிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு துவங்கியது அதனைத் தொடர்ந்து காவல்துறையின் பல்வேறு பிரிவு வீரர் மற்றும் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
விழாவில் அதிகம் கவர்ந்தது கல்லுாரி மாணவியரின் தமிழ் வாழ்த்திற்கான நடனங்களும்,பல்வேறு மாநில கலைஞர்களின் கலாச்சார நடனங்களும்தான்.
தமிழ் எழுத்துக்களை சுமந்தபடி நடனமாடியவர்கள் நிறைவாக அந்த எழுத்தைக் கொண்டே பாவேந்தர் பாரதிதாசன் உருவத்தை உருவாக்கியது ரசிக்கும்படியாக இருந்தது.
அசாம்,காஷ்மீர்,ஆந்திரா மாநில கலைஞர்களின் உற்சாக நடனங்களும் வரவேற்கும்படியாக இருந்தது.
இந்த விழாவில் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் பெருமளவில் பங்குபெற வேண்டும் இதன் மூலம் நாட்டுப்பற்று அதிகரிக்கும்.
-எல்.முருகராஜ்