10 கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு

புதுச்சேரி : கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கண்காணிப்பாளர் களில் 10 பேருக்கு தற்போது இளநிலை கணக்கு அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், பல்வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு துறை கண்காணிபாளர் பிரகாஷ்பாபு பதவி உயர்வுடன் மின் துறைக்கும், மாநில தேர்தல் துறை கண்காணிப்பாளர் கூத்தன் சீனிவாசன், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கும், தீயணைப்பு துறை கண்காணிப்பாளர் சுரேஷ் பொதுப்பணித்துறை சாலை கட்டட கோட்டத்திற்கும், மின்துறை நுகர்வோர் குறை தீர்வு மைய கண்காணிப்பாளர் சந்திரா, கோரிமேடு இ.எஸ்.ஐ., பிரிவுக்கும், கூட்டுறவு துறை கண்காணிப்பாளர் கவுரிநாத சர்மா போலீஸ் துறைக்கும், சுகாதார துறை துணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் அன்பரசு, மின் துறைக்கும், இளநிலை கணக்கு அதிகாரி பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபை கண்காணிப்பாளர் முருகன், காரைக்கால் பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் கோட்டத்திற்கும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலக கண்காணிப்பாளர் கோபால் காரைக்கால் மின் துறை அலுவலகத்திற்கும், புதுச்சேரி அமைச்சரவை அலுவலக கண்காணிப்பாளர் வைத்தியநாதன், காரைக்கால் கணக்கு கருவூலத் துறை அலுவலகத்திற்கும், தலைமை செயலக கண்காணிப்பாளர் சங்கரலிங்கம், மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கும் இளநிலை கணக்கு அதிகாரியாக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement