'தாட்கோ' வங்கி துவங்க யோசனை

மதுரை : மதுரையில் அகில இந்திய பட்டியல் இனப்பேரவை கூட்டம் மாநில தலைவர் அய்யாசாமி தலைமையில் நடந்தது. தேசிய செயலாளர் செந்தில், மாநில செயல் தலைவர் வெற்றிவேல், பொதுச் செயலாளர் குப்புசாமி, மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள், உதவியாளர்கள் சங்க தலைவர் வெங்கடாசலம், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் சுப்புலட்சுமி பங்கேற்றனர்.

பணிநியமனத்தில் கல்வி, தொழில்நுட்ப அடிப்படையில் தகுதியானவர் இல்லை என நிராகரிக்கும்பட்சத்தில், தகுதியானவர்களுக்கு பயிற்சி கொடுத்து பணியில் சேர்க்க வேண்டும். 'தாட்கோ' வங்கி ஏற்படுத்தி தொழில் துவங்க கடனுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement